பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சங்க இலக்கியத்தின் அகப்பாடல்களும் புறப்பாடல் களும் இயற்கைக் காட்சிகளின் வருணனைகளைத் தருமிடத்து மனித வாழ்வினோடு விரவிய தன்மையுடையன வாய்ப் பிணைப்பு ஊட்டியே தருகின்றன. இயற்கை மனிதனின் உள்ள த்தோடு எவ்வகையில் தொடர்புடைய தாயிருக்கின்றது என்பதைச் சங்க இலக்கியம் தெளிவுறுத்து கின்றது. அவ்வாறு அமைந்துள்ள இயற்கைக் காட்சிகள் மனித வாழ்வுக் கூறுகளை உள்ளுறையாகப் பெற்றுள்ளனவே யன்றி, வெளிப்படையாக அன்று. சங்க இலக்கியத்தில் மனித வாழ்வும் இடம் பெறுகின்றது; இயற்கைக் காட்சியும் இடம் பெறுகின்றது. எனினும், பின்னதைவிட முன்னதே தலைமையும் சிறப்பும் உடையதாய் முதன்மை பெறுகின்றது." சங்க இலக்கியத்தின் மையம் மானிட வாழ்வே: இயற்கை அதற்கு உறுதுணையாய் இரண்டாம் இடமே பெறுகின்றது." அச்சமூட்டும் பெருமிதமான இயற்கைக் காட்சிகளும் சங்க இலக்கியத்தில் உண்டு; அமைதி தவழும் மென்மை யான இயற்கைக் காட்சிகளும் அங்கு உண்டு. இவை யாவும் சங்கப் புலவர்கள் தம் சொந்த அனுபவத்தால் பாடியவை; தமக்கு வாய்த்திருந்த நல்ல இயற்கைச் சூழ்நிலையை இயல்பான சுவையுணர்வோடு நுகர்ந்ததன் விளைவாக எழுந்தவை. புறத்தில் நிகழ்வன வற்றைக் கலையுணர்வோடு நோக்கும் திறமை அவர்கட்குக் கைவந்திருந்தது. அண்மையிலும் தொலைவிலும் இருந்த உயிருள்ளனவும், இல்லனவும், வலியனவும், மெலியனவும் ஆகிய இயற்கைப் பொருட்கள் அவர்களின் கருத்தை ஈர்த்தன. தம்மைச் சூழ்ந்திருந்த நீர்நிலைகளையும் வானத்தையும் வயல் வெளிகளையும் மலைச்சாரல்களையும் தாமே நன்கு நுகர்ந்து, அந்நுகர்ச்சியினைக் கவிதையாக வடித்தார்கள். புலன் நுகர்ச்சிகளில் முழு மனத்தோடு