பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 43. ஈடுபடும் தமது தனித்திறமையால் இயற்கையை முழுமை யாகவும் நுட்பமாகவும் கண்டார்கள்; எந்தச் சிறு பகுதி யையும் புறக்கணிக்காமல் கடிந்து நோக்கி உணர்ந்தார்கள். தம் உணர்வைத் தக்க சொற்களால் கவிதையில் தொடுத்தார்கள். எனவே, அவர்களின் கவிதையில் எல்லாம் தம் வாழ்விற்குத் துணைநின்ற இயற்கையின் பல்வேறு வடிவங்களை நுண்ணுணர்வோடு கண்டுணர்ந்த அனுப வத்தின் வெளிப்பாடுகள் என்று கூறுவதில் தவறில்லை." இயற்கையும் கவிஞனும் புலவர்கள் இயற்கையின்பால் கொள்ளும் எல்லை யில்லா ஈடுபாடு இயற்கையிடத்துள்ள அழகாலோ அல்லது கவர்ச்சியாலோ ம ட் டு ம் ஏற்பட்டதல்ல. அது இயற்கையின் பயன்பாட்டாலும் ஏற்பட்டதே. எனவே இவ்வீடுபாடு பிற்காலக் கவிதைகளிலும் புகுந்துள்ளது. பயன்பாடு கருதி இயற்கையின்பால் ஈடுபாடு கொள்ளும் புலவன் அதன் மேற்போக்கான தோற்றத்தை மட்டும் கருத்தில் கொண்டு ஈடுபடுவதில்லை. கதிரவனின் எழுச்சி யையும், மறைவையும், வானவில்லின் தோற்றப் பொலி வையும் மேலும் பிற இயற்கை வனப்புகளையும் கவிதை மொழியில் கூறுவது மட்டும் கவிஞனின் கடமையல்ல. கவிஞன் இவற்றை இயம்புகையில் இயற்கையின் மறைவு களிலும் புகுந்து மனிதனுக்கும் இயற்கைக்கும் இடை யிலுள்ள தொடர்பை அறிய முனைகிறான் . இயற்கை நிகழ்ச்சிகளில் சில மனிதனுக்கு வியப்பும் அச்சமும் உண்டாக்குகின்றன. தன்னைச் சூழ்ந்துள்ள இயற்கையின் அதிசயங்களும் அவனைச் சிந்திக்கச் செய் கின்றன. இச்சிந்தனைகளின் வெளியீடே இலக்கியங் களாகின்றன. மக்கள் வாழ்வு இயற்கையோடு இயைந்தது. ஆடி வரும் தென்றலிலும், பாடிவரும் அருவியிலும், மணமிகு மலர்களிலும், கணந்தோறும் புதிய புதிய கோலங்காட்டும்