பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வானத்தின் வண்ணத்திலும் ஈடுபடாத மனித மனம் இல்லை. கவிஞர்கள் மட்டும் விதி விலக்கா? * -*. "இயற்கை மனிதனுடன் தொடர்புடையது; அது அறிவுரைகளையும் படிப்பினைகளையும் மனிதனுக்குக் கொடுத்து அவனிடம் மனிதப் பண்பை வளர்க்கிறது. 2 கைபுனைந்தியற்றாத இயற்கையழகில் மனம் பறி கொடுத்த ஒருவரின் மனத்தில் இயற்கையைக் காணுந்: தோறும் உள்ளக் கிளர்ச்சி ஏற்படுதல் உறுதி. இதனால் தான் தனிமையில் இயற்கையால் கவிஞன் பெறும் இன்பத்தைத் தலைவியோடு த னி த் து விடப்பட்ட தலைவனின் இன்பத்திற்கு இணையாகக் கூறுகிறார் புரூக் என்பவர். இவ்வாறு மனிதப் பண்பைப் பெருக்கும் தன்மையுள்ள இயற்கையை மனித வாழ்வோடு இயைத்துப் பண்டைக் காலந்தொட்டுப் புலவர்கள் பாடி வந்ததில் வியப்பில்லை. கவிஞன் இயற்கையை நோக்கும் முறையில் அவனது. தனிவாழ்வு வெளிப்படலும் உண்டு. கீட்ஸ் எனும் ஆங்கிலக் க விஞர் பால் உணர்ச்சியோடு இயற்கையைக் காண்கிறார். இயற்கையில் இறைமையைக் காணு கின்றனர் ஷெல்லியும், வேர்ட்ஸ்வொர்த்தும். பைரன் இயற்கையின் ஆரவாரத் தன்மையை மிகவும் விரும்பு கிறார். பாரதியும், பாரதிதாசனும் தத்தம் குறிக்கோள் களை இயற்கையில் காணுகின்றனர். இலக்கியத்தில் இயற்கை மேற்கண்டவாறு இடம் பெற்றிருப்பினும் புலவர் களுக்கேற்ப, அவ்வியற்கையை வெளியிடும் முறையில் வேறுபாடு காணப்படுகிறது. சங்க காலத்திற்குப் பின்பு, காவிய காலத்தில் இயற்கை வெறும் அழகுக்காக, ஆறு, கடல், நாட்டு வருணனையாகக் கையாளப்படுகிறது. பக்தி இலக்கியம் இயற்கையில் இறை வடிவம் காண்கிறது. பிறகு, இயற்கை பற்றிய சங்க