பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 45 இலக்கியத்தின் ஒப்பற்ற கொள்கை தமிழிலக்கியத்தி லிருந்து மறைந்திருப்பதையே அறிய முடிகிறது. அணியிலக்கணத்தால் உயிரிழந்து குற்றுயிராகக் கிடந்த தமிழ்க் கவிதை பாரதிக்குப் பின் மறுவாழ்வு பெற்றபோது ஷெல்லி போன்றோரின் கவிதைத் தாக்கம் தமிழில் ஏற்படத் தொடங்கியது. பாரதி, ஷெல்லிதாசன்' என்றே புனைபெயர் வைத்துக் கொண்டது. இதனால்தானோ? அப்பாரதியின் தாசன், மேல்நாட்டு இயற்கைக் கவிஞர்கள் போல் தமிழில் இயற்கை தழுவிய ஒரு முழு நூலையே படைத்திருக்கிறார். - இங்குப் பாரதிதாசனின் கவிதை நூல்கள் மட்டும், (அ) அழகின் சிரிப்பில் இயற்கை அமைந்துள்ள பாங்கு (ஆ) மற்ற நூல்களில் இயற்கை அமைந்துள்ள பாங்கு என இரு நிலைகளில் ஆய்வுக்கு மேற்கொள்ளப் பெற் றுள்ளன. = அழகின் சிரிப்பு அழகின் சிரிப்பு பாவேந்தரால் இயற்கை அழகில் திளைத்து எழுதப்பட்ட இயற்கை அழகு மிளிரும் இனிய நூல். சிறந்த முறையில் இயற்கையைப் பாடிய புலவர் பாவேந்தர். - மேலைநாட்டிலே வேர்ட்ஸ்வொர்த்து' என்னும் கவிஞரைக் குறிப்பிடும்போது, இயற்கையே எழுதுகோல் பிடித்துக் கவிஞருக்குப் பதிலாகக் கவிதை புனைந்தது (Nature itself wrote for him) are ruf- (3)één sign [oth பாவேந்தரைப் பொறுத்தவரையில் முற்றும் பொருந்துவ தாகும்.

இயற்கை அனைத்தும் அழகே. அந்த அழகு செந்தாமரை என்றும், நிலவென்றும், கதிரென்றும் சிரித்தது. காணும் பொருளிலெல்லாம் அழகைக் காணவும்