பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் கண்டவாறு தாமே சொல்லோவியம் தீட்டவும் திறம் பெறுதல் வேண்டும். தமிழர்கள் பிறமொழி, தமிழ் மொழி நூல்களில் பார்த்தபடியே எழுதும் நிலை தீர வேண்டும். அதற்கு இச்சிறு நூல் இயற்றியதன் வாயிலாக நான் இதை அறிஞர்க்கு நினைவுறுத்துகிறேன்' என்று கவிஞர் அழகின் சிரிப்பு என்னும் நூலின் முன்னுரையில் சிந்தனையோடு குறிப்பிட்டுள்ளார். - இவ்வகையில் எழுந்த நூல் அழகின் சிரிப்பு எனலாம். மேலை நாட்டில் ஏரிவட்டக் கவிஞர் (Lake Poet) எனப் புகழப்பெறும் வோர்ட்ஸ்வொர்த்தைப் போல், தமிழ்க் கவிஞர்களில் இயற்கையை இணையற்ற வகையில் அழகுற, எழிலுற வருணித்துப் பாடியவர் புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் எனலாம். அழகின் சிரிப்பி ன் முதற்பகுதி அழகு ஆகும். இப்பகுதியில் தான் கண்ட அழகையெல்லாம் விளங்க விளக்குகிறார் கவிஞர். அதனையடுத்துக் கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வான், ஆல், புறாக்கள், கிளி, இருள் முதலிய பன்னிரண்டு பொருட்களைப் பற்றிய கவிதைகள் கனிந்துள்ளன. பிறகு, சிற்றுார், பட்டணம், தமிழ் என்னும் முப்பொருள்களை நமக்குக் காட்டுகிறார். பாக்கள் இனிமையாகவும், அழகுடனும் அமைந்துள்ளன. பாரதிதாசன் நூல்களில் இதைச் சிறந்ததாகக் கூறின் மிகையாகாது. -Ց|ԱԶG; தமக்கு அழகு கவிதை தந்த இடங்களை அழகுறப் புலப் படுத்தும் போக்கிலும் நோக்கிலும் மூன்று பாடல்கள் முன்னுரையாக - வாயிலாக அமைந்துள்ளன.

  • அழகுப் பொருட்கள் என்றும் அழியாத இன்பம் நல்கும்’ (A thing of beauty is a jor for ever) arcărgy & Laio' grain goth கவிஞர் பெருமான் குறிப்பிட்டார்.