பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 47 புரட்சிக் கவிஞருக்கும் அழகே கவிதை கொடுக்கிற தாம். காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்; அந்தச் சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில் தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ் சாலையிலே கிளைதொறும் கிளியின் கூட்டங் தனில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள். -அழகின் சிரிப்பு: அழகு, ப. 1. இவ்வாறு இளம்பரிதியிலும், கடற்பரப்பிலும், ஒளிப்பு னலிலும், சோலையிலும், மலர்களிலும், தளிர்களிலும், மாலை மறையும் மாணிக்கச் சுடரிலும், ஆலமரத்தின் கிளையிலும், கிளையின் கிளியிலும் பொலியும் அழகு, கவிஞர்தம் நெஞ்சில் உணர்ச்சி ஊற்றினைப் பெருக்கி உயர் கவிதைகளை உருவாக்கிற்று. * அழகுதனைக் கண்டேன், நல்லின்பம் கண்டேன்' என்று அழகுதரும் அமைதியான இன்பத்தினைப் பேசும் கவிஞர், சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் கின்றாள் திருவிளக்கிற் சிரிக்கின்றாள்: நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ ளைவில் நாடகத்தைச் செய்கின்றாள் அடடே செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் புதுநடையில் பூரித்தாள்; விளைந்த கன்செய் நிலத்தினிலே என்விழியை நிறுத்தினாள்; என் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள். -அழகின் சிரிப்பு: அழகு, ப. 2. சிறுகுழந்தை விழியினில், திருவிளக்கில், மலர் தொடுக்கும் நங்கையரின் விரல் வளைவில், உழவன்