பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(2ల్లో@y TNమ్ర• | Hom -Q இந்த நூற்றாண்டின் தலைசிறந்த கவிஞராய், புரட்சிக் கவிஞராய், பாவேந்தராய்ப் பாரதிக்குப்பின் வாழ்ந்த கவிஞர்களுள் தகுதியும் சிறப்பும் மிக்கவராய்த் துலங்குபவர் புதுவைப் புரட்சிக்குயில் பாரதிதாசன் ஆவர். நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா என்று பாரதியாரைப் பாரதிதாசன் குறிப்பிட்டிருப்பது அவருக்கும் பொருந்தும். தமிழ்ப் பெரியார் திரு. வி. க. அவர்கள், எனக்குக் குயிலின் பாடலும், மயிலின் ஆடலும், வண்டின் யாழும், அருவியின் முழவும் இனிக்கும்; பாரதிதாசன் பாட்டும் இனிக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார். காட்டாற்று வெள்ளத்தின் வேகம் கொண்ட கவிதைகளால் பாவேந்தரி புரட்சி செய்தார்...கீழே அடித்தவுடன் மேலெழும்பும் பந்தென் றிட்டால் அது புரட்சிக் கவிஞருக்கே பொருந்தும்" என்பர் உவமைக் கவிஞர் சுரதா. இலக்கியத்துக் கணிசெய்தாய், இசைக் கலையின் வளம் மிகுத்தாய்; கிறைந்தமூடப் பழக்கத்தை வேரறுத்தாய்; பைந்தமிழைப் புதுப்பித்தாய்; ஒடிந்த நெஞ்சும் கிளர்ச்சிபெற முரசொலித்தாய், உரிமை எனக் கிளர்ந்தெழுந்தாய்; தமிழர் எங்கள் உளத்தினிலே குடிகொண்டாய், வாழிபுகழ்க் குன்றினுச்சி உலவு நீயே" என்று கவிஞர் குலோத்துங்கன்-இன்றைய அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் வா. செ. குழந்தைசாமி அவர்கள் குறிப்பிடுவர்.