பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பெருமித நடையில், நன்செய் நிலத்தில் எல்லாம் அழகு வீற்றிருக்கிறது. தாம் பெற்ற பேற்றினை நமக்கும் நல்க நல்லுளம் கொண்டு, பசையுள்ள பொருளிலெலாம் பசைய வள் காண்! பழமையினாற் சாகாத இளைய வள் காண்! கசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்! கல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை. -அழகின் சிரிப்பு: அழகு 3. இப் பாடலடிகள் கீட்ஸ்" என்பாரின் இலக்கணத்திற்கு இலக்கியமாகத் திகழ்கின்றன. திசையும் அழகு; வானும் அழகு; வானக் கூரையின் கீழ்ப் புலப்படும் பொருட்களும் அழகு. அசையும் கொடிகள்: நிற்கும் மரங்கள் அனைத்தும் அழகே. அவ்வழகு இன்பத்தைத் தருகிறது. விருப்பந்தரும் பொருட்களில் விருப்பத்தை விளைவிக்கும் பொருள் அதுவாகும். பழமைக்குப் பழமையாயும் புதுமைக்குப் புதுமையாயும் துலங்கும் இளையோளாக அழகு விளங்குகின்றாள். விருப்புடன் நோக்கினால் அவள் எங்குந் தென்படுவாள். அந்த நல்லழகின் வசப்பட்டால் நலிவில்லை; துன்பமில்லை. இங்குச் சிறப்பாக எண்ணத்தக்கது பசையுள்ள பொருளிலெலாம் பசையவள்" என்பதும், நசையொடு நோக்கினால் எங்கும் உள்ளாள்' என்பதும், நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை' என்பதும் ஆகும். இயற்கையழகு - திரு என்பதற்குக் கண்டாரால் விரும்பப்படும் தன்மை நோக்கு' எனப் பொருள் கண்டார் பேராசிரியர். இக்கருத்து இங்கு நோக்கத்தக்கது. இயற்கையழகு இணையற்று விளங்கும் பலவிடங் களைப் பத்துப் பத்துப் பாடல்களில் பத்து அறுசீர் விருத்தங் களில் வருணிக்கும் பாவேந்தர் பாரதிதாசன் முதலாவ