பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஒடுநீர்ப் பரப்பும் காண இரு விழிச் சிறகால் நெஞ்சம் எழுந்திடும்; முழுதும் காண ஒரு கோடிச் சிறகு வேண்டும். i · · · · · · . அடடா எங்கும் விழுந்தது தங்கத் துாற்றல் வெளியெலாம் ஒளியின் வீச்சு! முழங்கிய நீர்ப்பரப்பின் முழுதும் பொன்னொளி பறக்கும் பழங்கால இயற்கைசெய்யும் புதுக்காட்சி ப ம்பி. ருகு த ட அழகின் சிரிப்பு, 7. என்று காலைக் கதிரவன் பிறப்பை வருணிக்கின்றார்" அவன் வரவால் உலகில் ஏற்படும் பரபரப்பை, இளங்கதிர் எழுந்தான்; ஆங்கே இருளின் மேல் சினத்தை வைத்தான்; களித்தன கடலின் புட்கள்; எழுந்தன கைகள் கொட்டி ளித்தது காரிருள் போய். 9. ரு - அழகின் சிரிப்பு, 8. என்று குறிப்பிடுகிறார். கடல் நீரும் நீல வானமும் கை கோக்கின்றன. இரண் டிற்கும் இடையே கிடக்கும் வெள்ளம் அழகு வீணையாகும். அவ்விணைமேல் காற்று அடித்து அவ்வீணையின் நரம்பினை அசைக்கின்றது. அப்போது வீணை இயக்கவல்ல தேர்ந்த புலவனாக அக்காற்றுத் தென்படுகிறது. கடல்நீரும் லேவானும் கைகோக்கும்! அதற்கிதற்கும் இடையிலே கிடக்கும் வெள்ளம் எழில்விணை; அவ்விணைமேல் அடிக்கின்ற காற்றோ வீணை நரம்பினை அசைத்தின்பத்தை வடிக்கின்ற புலவன். - அழகின் சிரிப்பு, 8.