பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 51. பொன்னுடை களைந்து, வேறே புதிதான முத்துச்சேலை தன்இடை அணிந்தாள் அந்தத் தடங்கடற் பெண்ணாள் - அழகின் சிரிப்பு, கடல் 9.. என்று மேலும் கடலை வருணிக்கின்றார். நிலாக்காலக் கடலின் நிறத்தை இங்கு விளக்குகிறார். இவ்வாறாக, உலகத்தைச் சுற்றிலும் அழகு தென் படுவதாகக் கவிஞர் கூறுகிறார். தென்றல் தமிழர் இயற்கையின் இனிய பெற்றியை நுகர்ந்தவர்கள். வடக்கேயிருந்து வரும் காற்றை வாடை. என்றும், தெற்கேயிருந்து வீசும் காற்றைத் தென்றல்' என்றும், மேற்கேயிருந்து வரும் காற்றைக் கோடை" என்றும், கிழக்கேயிருந்து வரும் காற்றைக் கொண்டல்' என்றும் பழந்தமிழர் குறிப்பிட்டனர். இவற்றில் தென்றல்' என்னும் தென்திசைக் காற்றை விரும்பி வரவேற்றனர்: வாடை என்னும் வடக்குக் காற்று உடலுக்கு ஊறு செய்யும் என வெறுத்தனர். காற்றெனப் பேர் இருக்கத் தென்றலென்றபேர் ஏன்? சிறப்புநிலை காட்ட அன்றோ? - பாரதிதாசன் கவிதைகள், பகுதி 3, ப. 97. என்று தென்றலின் சிறப்பைக் கூறும் பாவேந்தர் தென்றல் பற்றி, தென்னாட்டின் தனிச்சொத்துப் பற்றி, தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன் இன் பத்தைத் தென்னாட்டுக் கல்லால் வேறே எங்காட்டில் தெரியச் செய்தாய்? -அழகின் சிரிப்பு, தென்றல்-10)