பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் என்று குறிப்பிடுகின்றார். இங்குப் பாவேந்தரின் நாட்டுப் பற்றைக் காண முடிகின்றது. உன் அரும் உருவம் காணேன் ஆயினும் உன்றன் ஒவ்வோர் சின்னால் அசைவும் என்னைச் சிலிர்த்திடச் செய்யும் -அழகின் சிரிப்பு, தென்றல்-11 என்று தோன்றாப் பொருளாகிய தென்றலின் இனிமையை விளக்குகின்றார். ........பெண்கள் விலக்காத உடையை நீபோய் விலக்கினும், விலக்கார் உன்னை -அழகின் சிரிப்பு, தென்றல் 11 என்று அனைவரும் போற்றும் செல்லக் குழந்தையாகத் தென்றலைப் போற்றுகின்றார். இழந்திட்டால் உயிர்வாழாத என்னாசை மலர்முகத்துக் குழந்தையின் நெற்றி மீது குழலினை அசைப்பாய்; அன்பின் கொழுந்தென்று கினைத்துத் கண்ணிற் குளிர்செய்து மேனியெங்கும் வழிந்தோடிக் கிலுகிலுப்பை தன்னையும் அசைப்பாய் வாழி இருந்த ஓர் மணமும், மிக்க இனியதோர் குளிரும் கொண்டு விருந்தாய் நீ அடையுந்தோறும் கோடையின் வெப்பத்திற்கு மருந்தாகி அயர்வி னுக்கு மாற்றாகிப் பின்னர் வானிற் பருந்தாகி இளங்கிளை மேற் பறந்தோடிப் பாடுகின்றாய் -அழகின் சிரிப்பு, தென்றல்.12