பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 53; என்று சின்ன குழந்தையின் மலர் முகத்தின் மேலிருக்கும். நெற்றி மீது துலங்கும் குழலினை அசைக்கிறது. தென்றல். அதன் கையிலுள்ள கிலுகிலுப்பையினையும் தென்றல் அசைக்கின்றது. வெப்பத்திற்கு மருந்தாகி, சோர்விற்கு மாற்றாகிப் பின் வானிற் பருந்தாகி இளங்கிளைமேற். பறந்தோடிப் பாட்டிசைக்கின்றது. கமுகொடு நெடிய தென்னை கமழ்கின்ற சந்த னங்கள் சமைகின்ற பொதிகை அன்னை உனைத் தந்தாள்; தமிழைத் தந்தாள் தமிழ் எனக் ககத்தும் தக்க தென்றல் நீ புறத்தும், இன்பம் அமைவுறச் செய்வதை நான் கனவிலும் மறவேன் அன்றோ? -அழகின் சிரிப்பு, தென்றல்.13, என்று தமிழும் தென்றலும் தமக்குத் தரும் இன்பத்தினை -9IէՔ& ն) விளக்குகிறார். அழகைப் பாடும்போதுகூட மொழிப்பற்றும், நன்றியுணர்வும் கவிஞரை ஆட்கொள் கின்றன. தும்பியின் கண்ணாடிச் சிறகில் மின்னி, மலர்களின் இதழ்களில் கூத்தாடித் துளி தேன் சிந்தி, சிறு பிள்ளைகள் விளையாடும் பந்தினைத் தள்ளிச் சென்று, கிளியின் சிறகுகளைப் பற்றித் தென்றல் விளையாடுவதாகக் கூறி முடிக்கிறார் கவிஞர். காடு நாட்டையடுத்து விளங்கியது காடு. காடு மிகுந்தால் மழைக்குப் பஞ்சமில்லை. காட்டில் இயற்கை கொலு வீற்றிருக்கிறது. நாடினேன்; நடந்தேன் என்றன் நகரஒ வியத்தைத் தாண்டித்