பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-54 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தேடினேன்; சிற்றுார் தந்த காட்சியைச் சிதைத்தேன்; சென்றேன் பாடினேன் பறந்தேன் தேய்ந்த பாதையை இழந்தேன் அங்கே மாடி வீடொன்று மில்லை மரங்களோ பேசவில்லை -அழகின் சிரிப்பு, காடு, ப. 14. கவிஞர் கவினுறு காட்டுக் காட்சியைக் கண்டு சென்ற பொழுது மயிலொன்று அகவித்தோகை விரித்து வரவேற்பு வழங்கியது. கறுப்பு எலியொன்று வாலை ஆட்டி நின்றது; நல்லவழி காட்டிச் சென்றது. கொடுவாள் மீசை கொண்ட வேடன் கவிஞர் எதிரில் வந்தான். வேட்டையிற் சிக்கிய பறவைகளைக் காட்டினான் * அவைகளின் பெயர் களைக் கேட்டேன். பரத்துவன் என்னும் பறவையை நல்ல தூயதமிழில் வலியன் என்று கூறினான். சகோதரத்தைச் செம்போத்து' என்றான்! தமிழா. நீ வாழ்க!" என்று வேடனைப் பாராட்டியதாகக் கவிஞர் கூறுகிறார். இழந்தபெட் டையினைக் கண்டே எழுந்தோடும் சேவல் வாலின் கொழுந்துபட் டெழுந்த கூட்டக் கொசுக்களை முகில்தான் என்று தழைந்ததன் படம் விரிக்கும் தனிமயிலால் அடைத் தேன்' வழிந்திடும்; கரடி வந்து மயிலுக்கு வாழ்த்துக் கூறும் -அழகின் சிரிப்பு, காடு, ப. 17 என்று பறவை, விலங்கினங்களின் இயற்கைச் செயல்களை விளம்புகிறார். இவ்வாறாகக் காடு பயன்பல நல்குவதாக விளக்குகிறார்.