பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் லேமுக் காட்டுக்காரி கிலாப் பெண்ணாள் வற்றக்காய்ந்த பாலிலே உறை மோர் ஊற்றிப் பருமத்தால் கடைந்து, பானை மேலுற்ற வெண்ணெய் அள்ளிக் குன்றின்மேல் வீசிவிட்டாள்; ஏலு மட்டுந்தோ ழா!ே எடுத்துன்பாய் எழிலையெல்லாம் -அழகின் சிரிப்பு குன்றம், ப. 21. என்று எழில் பெற்ற குன்றத்தை வகையுற வருணிக்கிறார் கவிஞர். நீலமுக்காட்டுக் காரியாகிய நிலவாகிய பெண்ணாள், வற்றக்காய்ந்த பாலிலே உறைமோர் ஊற்றிப் பருமத்தால் கடைந்து, பானை மேலுற்ற வெண்ணெயை அள்ளிக் குன்றின்மேல் வீசி விட்டாள். அவ்வெழிலை இயன்ற மட்டும் எடுத்துண்ணுவாய் என் தோழா ! என்கிறார் கவிஞர். لالا رہائی 'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்பர். சங்க காலத்தில் வழி' என்ற பொருளையும் குறித்த இச்சொல் இன்று நீரோட்டமாகிய ஆற்றையே குறித்து வழங்குகிறது. ஆறு உயிருக்கு அழகூட்டுகின்றது; நீருட்டுகின்றது; குளிர்ச்சி தருகின்றது; கண்ணுக்குக் கவினுறு காட்சி நல்கு கின்றது. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆற்றினை அழகு, பட வருணித்துள்ளார். ஒரே வகை ஆடை பூண்ட பெரும்படை, ஒழுங்காய் கின்று சரேலெனப் பகைமேற் பாயும் தன்மைபோல் ஆற்று வெள்ளம், இராவெல்லாம் நடத்தல் கண்ட