பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி, பாலசுப்பிரமணியன் 57 இருகரை மரங்கள் தோல்வி வராவண்ணம் நெஞ்சால் வாழ்த்தி மலர்வீசும் கிளைத்தோள் நீட்டி என்று ஆற்று வெள்ளத்தின் வெள்ளத்தையும், அதன் கண்குளிர் காட்சியழகையும், கரையோர மரங்களின் மலர்க்கிளையையும் வருணிக்கின்றார். வெள்ளம் இரு கரையிலும் மோதித் ததும்புகின்றது: அக்கரைகள் தங்கச் சரிவுகளாகின்றன. துறையோ முத்துத் தடுக்குகளாகின்றது. மீன்கொத்திப் பறவைகள் சுழல் கின்றன. நீரில் மிதந்து செல்லும் மரங்களின்மேல் அமர்ந்திருக்கும் நாரையொன்று வெண்டாழம் பூப்போன்று விளங்குகின்றது. அதுபோது எழும் உவப்பினுக்கு எல்லை யில்லை. இருகரை ததும்பும் வெள்ள நெளிவினில் எறியும் தங்கச் சரிவுகள்; துறையோ முத்துத் தடுக்குகள்; சுழல்மீன்கொத்தி மரகத வீச்சு நீரில் மிதக்கின்ற மரங்களின்மேல் ஒருநாரை வெண்டாழம்பூ உவப்புக்கோ உவமை இல்லை என்று சொல்லோவியம் துலங்கும் பாட்டைச் சித்திரிக் கிறார் பாவேந்தர். நூற்றுக்கு நூறுபேர் நோய் தீர்ந்து வறுமை தீர்ந்தனர். கலப்பை தூக்கிய உழவர் குடிப் பெருமக்கள் ஒய்வின்றி உழவுப்பணி ஆற்றினர். தான் பெற்ற குழந்தைகளின் மகிழ்ச்சிகண்டு ஆற்றுத்தாய் சிலம்படி குலுங்க நடக் கின்றாள். இந்த வையகம் தழைக்க என வாழ்த்து கின்றாள். шт—4