பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட நல்ல நூல்களைத் தமிழ் கூறும் நல்லுலகிற்குத் தந்து சென்றுள்ளார். அவருடைய அழகின் சிரிப்பு’, ‘குடும்ப விளக்கு , தமிழியக்கம்’, 'பாரதிதாசன் கவிதைகள் 1", எதிர்பாராத முத்தம்', 'அமைதி" ஆகிய நூல்கள் காலங் கடந்தும் வாழும் திறஞ் சான்றனவாகும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழக அரசு பாரதிதாசன் நினைவைப் போற்றும் வகையில் ஒர் அறக் கட்டளையினை நிறுவியுள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் அறக்கட்டளையின் கீழ் 1984 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி அவர்கள் தலைமையின் கீழ்ச் சொற்பொழிவு ஆற்றினேன். முதல் நாள், பாரதிதாசன் பாடல்களில் இயற்கை' என்ற தலைப்பிலும், இரண்டாம் நாள், பாரதிதாசன் பாடல்களில் இலக்கியம்' என்ற தலைப்பிலும், மூன்றாம் தாள், 'பாரதிதாசன் பாடல்களில் இயக்கம்' என்ற தலைப்பிலும் மூன்று நாள்கள் தொடர்ந்து சொற் பொழிவுகள் ஆற்றினேன். பாரதிதாசன் அவர்கள் சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்த அவர்தம் இறுதிக் காலத்தில் அவரோடு நெருங்கிய தொடர்பு கொள்ளும் வாய்ப்பு வாய்த்தது. *உலகத் தமிழ்க் கவிஞர் மன்றம்' என்று அவர்தம் வீட்டில் அவர்தம் முயற்சியால் தொடங்கப்பெற்ற அவ்வமைப் பின் பொருளாளராய் இருந்து தொண்டாற்றினேன். அப்பொழுதெல்லாம் அவர்தம் பெருமித உணர்வினையும் கவிதைப் பெருக்கினையும், தமிழுணர்வினையும், இன மானக் கிளர்ச்சி உள்ளத்தினையும் அறிய முடிந்தது. அவருடைய நூல்களையெல்லாம் பன்முறை படித்துத் துய்த்திருந்த பாங்கு, அறக்கட்டளைச் சொற்பொழிவினை நிகழ்த்துதற்கு உதவியது. மேலை நாட்டு இயற்கைக் கவிஞர் வேர்ட்ஸ் வொர்த் என்னும் கவிஞர் பெருமகனைப் போல, அழகின் சிரிப்பு' என்னும் நூலில் இயற்கை வழங்கும் இன்பக் காட்சிகளைக்