பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சேய்களின் மகிழ்ச்சி கண்டு சிலம்படி குலுங்க ஆற்றுத் தாய்ாடக் கின்றாள் வையம் தழைகவே தழைக என்றே - அழகின் சிரிப்பு, ஆறு, ப.25. என்று கூறி ஆற்று வருணனையை முடிக்கின்றார். செந்தாமரை கண்ணுக்குக் கவினுறு காட்சி வழங்குவது செந்தாமரை யாகும். பூவெனப் படுவது பொறி வாழ் பூவே எனத் தாமரை மலரைத் தமிழ் இலக்கியங்கள் குறிக்கும். செந்தாமரை குறித்த செய்திகளைப் பாவேந்தர் கவினுற விளக்குகிறார். கண்ணாடித் தரையின் மீது கண்கவர் பச்சைத் தட்டில் எண்ணாத ஒளிமுத் துக்கள் இறைந்தது போல்கு ளத்துத் தண்ணிரி லேப டர்ந்த தாமரை இலையும், மேலே தண்ணிரின் துளியும் கண்டேன் உவப்போடு வீடு சேர்ந்தேன் - அழகின் சிரிப்பு, செந்தாமரை, ப. 26. கண்ணாடித் தரையின் மீது காணும் பச்சைத் தட்டில் கிடத்தப் பெற்ற ஒளிமுத்துக்கள் போல, குளத்துத் தண்ணிரிற் படர்ந்த தாமரை இலைமேல் முத்துத் துளிகள் போன்ற நீர்த்திவலைகள் என்ற உவமை உன்னத்தக்கது. மணி இருள் அடர்ந்த வீட்டில் மங்கைமார் செங்கை ஏந்தி அணிசெய்த கல்வி ளக்கின் அழகிய பிழம்பு போலத் தனிஇலைப் பரப்பிற்செங்