பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 59 தாமரைச் செவ்வரும்பு பிணிபோக்கி என்வி ழிக்குப் படைத்தது பெருவி ருந்தே - அழகின் சிரிப்பு, செந்தாமரை, ப. 27. இருள் மிகுந்த வீட்டில் எழில்மிகு நங்கையர் தம் செங்கைகளில் மணி விளக்கேந்தி அணிசெய்தல் போலத் தாமரை இலைப்பரப்பில் செந்தாமரைச் செவ்வரும்புகள் முகிழ்த்துக் கவிஞரின் இரு விழிகளுக்குப் பெருவிருந்து படைத்தன. இங்குப் பெண்களின் கைவிளக்குகளுக்கும், செந்தாமரை மலர்க்கும் உவமை கூறியிருப்பது அவர்தம் உணர் நுட்பத்தை அறிய முடிகிறது. - விண் போன்ற வெள்ளக்காடு மேலெலாம் ஒளிசெய் கின்ற வெண்முத்தங் கள்கொ ழிக்கும் பச்சிலைக்காடு, மேலே மண்ணுளார் மகிழும் செந்தா மரைமலர்க் காடு நெஞ்சைக் கண்ணுளே வைக்கச் சொல்லிக் கவிதையைக் காணச் சொல்லும் - அழகின் சிரிப்பு, செந்தாமரை, ப. 27. என்று மலர்களின் மகிழ்ச்சிப் பொலிவினை மணக்கும் தமிழில் கவிஞர் கூறுகிறார். செந்தாமரை மலர் எவரையும் எளிதில் கவர்ந்து தன் பால் இழுக்கவல்லது என்பதை யறியலாம். என்னை நான் இழந்தேன்; இன்ப உலகத்தில் வாழ லுற்றேன்; இன்றெலாம் பார்த்திட்டாலும் தெவிட்டாத எழிலின் கூத்தே! என்று இயற்கையின் அழகுக் கூத்துக்களையும், அதன்பால் அவர் கொண்ட ஈடுபாட்டையும் அறியலாம்.