பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஞாயிறு ஞாயிறு - கதிரவனைப் போற்றாத தமிழ் நூல்கள் இல்லை. உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு என்பர் திருமுருகாற்றுப்படை தந்த நக்கீரர். எழுஞாயிற்றினை மக்கள் தொழு ஞாயிறாகக் கொண் டனர். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்' என்றார் சிலம்பு தந்த சீர்சால் கவிஞர் இளங்கோவடிகள். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் ஞாயிற்றின் சிறப்பை யெல்லாம் தெளிவுறக் காட்டுகின்றார். ஞாயிறு ஒளிப்பொருள்! உலகிற்கு ஒரு பொருள். நெஞ்சத்திற் களிப்பை விளைவிக்கும். கூத்தைச் சேர்க்கும் கனற்பொருள். ஆழமான நீரினின்று வெளிப்படுவதுபோல் எழுகின்றது. வானக் கூரையிலெல்லாம் பொன்னை அள்ளித் தெளிக்கின்றது. கடற்பரப்பில் அலைமோதும் அலைகளிலெல்லாம் ஒளியூட்டுகின்றது. விண்ணெலாம் பொன்னை அள்ளித் தெளிக்கின்றாய்; கடலிற் பொங்கும் திரையெலாம் ஒளியாய்ச் செய்தாய் -அழகின் சிரிப்பு, ஞாயிறு, ப. 30. பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடரி மயிர் சிலிர்க்கும் சிங்கம் நிகர்த்த ஞாயிறே! வான வீதியில் தகதகவென எரியும் நெருப்புப் பிழம்பே! மாணிக்க மலையே! தீர்ந்த தங்கத்தின் தட்டே! வான அகலில் ஏற்பட்ட பெருவிளக்கே! என்று வருணிக்கிறார். மங்காத தணற்பி ழம்பே! மாணிக்கக் குன்றே; தீர்ந்த தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவிளக்கே -அழகின் சிரிப்பு, ஞாயிறு, ப. 31. என்று வியக்கிறார். அழகில் மூழ்குகிறார்.