பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 61 வான் வானம் பார்க்கப் பார்க்க வண்ண வண்ண அழகைத் தருகிறது. ஒவ்வொரு நேரத்தில் வானம் ஒவ்வொரு காட்சியை வழங்குகிறது. வைகறை வானம் வேறு; காலை வானம் வேறு; நண்பகல் வானம் வேறு; மாலை வானம் வேறு; முன்னிரவு வானம் வேறு; நள்ளிரவு வானம் வேறு. வகை வகையான காட்சி வழங்கும் வானம் என்றைக்குமே கண்கொள்ளாக் காட்சிதான். வெயில் வான் வேறு; மழைவான் வேறன்றோ! தொடக்கத்திலேயே விண்மீன்கள் நிறைந்த வானைக் காட்டும் கவிஞர் தம் பொதுவுடைமைக் கருத்தினைப் புகுத்திப் புதுநோக்கில் பாடியுள்ள திறம் காணலாம். இைம்மண் மீது உழைப்பவர்கள் எல்லாம் வறுமை வாய்ப்பட்டவர்கள், செல்வர்கள், வறியவர்கள், உரிமை கேட்டால் புண் மீதில் அம்பு பாய்ச்சும் புலையராய்த் திகழ்கிறார்கள். பகற்பொழுது முழுவதும் கண்டு கொண்டிருக்கிற வானம் இராப் பொழுதில் விண்மீன் களாய்க் கொப்பளித்தெழுகிறதாம். கவிஞரின் கற்பனை, மண் மீதில் உழைப்பா ரெல்லாம் வறியராம்! உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம், இதைத்தன் கண்மீதில் பகலி லெல்லாம் கண்டுகண் டங்திக் குப்பின் விண்மீனாய்க் கொப்பளித்த விரிவானம் பாராய் தம்பி! -அழகின் சிரிப்பு, வான், ப. 34. என்று வடிவெடுக்கிறது. கிழக்குப்பெண் விட்டெறிந்த கிளிச்சிறைப் பரிதிப்பந்து செழித்த மேற்றிசை வானத்தில்