பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் செம்பருத் திப்பூங் காவில் விழுந்தது! விரி விளக்கின் கொழுந்தினால் மங்கை மார்கள் இருள்மாற்றிக் கொடுக்கின் றார்கள் -அழகின் சிரிப்பு, வான், ப. 35. என்று அந்தி நேரத்தை வருணிக்கின்றார். உச்சியில் இருந்த வெய்யோன் ஒரடி மேற்கில் வைத்தான் நொச்சியின் நிழல் கிழக்கில் சாய்ந்தது! ■ -அழகின் சிரிப்பு, வான், ப. 37. என மாலையின் வருகையைப் படம் பிடிக்கிறார். வானம் எவ்வளவு பெரியது; அதனோடு ஒப்பிட்டு உன்னை நீ எண்ணிப் பார். இப்பூவுலகம் ஒரு கொய்யாப் பிஞ்சு என்றால் நீ அதில் ஒரு சிற்றெரும்பு. மக்கள் அனைவரும் அவ்வாறே அமைந்திருக்க, நான் மேல், நீ கீழ் என்று மக்கள் பேசுவதெல்லாம் பித்தேறியவர் பேச்சேயன்றோ!' என்று வான் தந்த பாடமாம் சமத்துவ நோக்கினை வடித்துத் தருகிறார் புரட்சிக் கவிஞர் - இயற்கைக் கவிஞர் பாரதிதாசன். ஆல விண்ணுற வோங்கி மண்ணில் விழுது பரப்பித் தழைத்து வளர்ந்திருக்கும் ஆலமரம் காணக் கண்கோடி வேண்டும். மன்னன்படை தங்கும் பாங்குடைய மரம்; அம்மரத்தினை வருணிக்கும் கவிஞர் கூற்றில் நகைச்சுவை கொப்பளித்து வருவதனையும் காணலாம். ஆயஊர் அடங்கும் நீழல் ஆலிடைக் காணலாகும் நீலவான் மறைக்கும் ஆல்தான் ஒற்றைக்கால் நெடிய பந்தல் -அழகின் சிரிப்பு, ஆல், ப. 38.