பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தாலாட்ட ஆளின்றித் தவிப்பெய்திய கிளைப் பறவை களெல்லாம் தாங்கள் கால்கள் வைத்திருந்த கிளைகள் ஆடக் காற்றுக்கு நன்றி கூறும். ஆலினைக் காற்று மோதும் அசைவேனா எனச் சிரித்துக் கோலத்துக் கிளை குலுங்க அடிமரக் குன்று நிற்கும்! தாலாட்ட ஆளில்லாமல் தவித்திட்ட கிளைப் புள்ளெல்லாம் கால்வைத்த கிளைகள் ஆடக் காற்றுக்கு நன்றி கூறும் - அழகின் சிரிப்பு, ஆல், ப. 41. இவ்விரு பாடல்களும் கவிதையின் சிறந்த பெற்றியினை யெல்லாம் சிறக்க உணர்த்தி நிற்கின்றன. ஆலினைக் காற்று மோதும், அசைவனோ எனச் சிரித்துக் கோலத்துக் கிளை குலுங்க அடிமரக்குன்று நிற்கும். ஆகா! என்ன அழகான கற்பனை! என்ன அழகான வண்ணச்சித்திரம்! தாலாட்ட ஆளில்லாமல் தவித்திட்ட கிளைப்புள் எல்லாம் கால்வைத்த கிளைகளாடக் காற்றுக்கு நன்றி கூறும் என்ன காட்சி ஒவியம்! என்ன அரிய பண்பாடு! பாவேந்தர் பாரதிதாசனார் ஒருவரே இவ்வாறு கவிதை புனைய இயலும்! புறாக்கள் பல்வேறு வண்ணப் புறாக்கள் கண்ணுக்கு விருந்து: காட்சிக்கு மாட்சி; புறாக்கள் வாழ்வு கொண்டு மாந்தர்க்கு ஒழுங்கினையும் ஒழுக்கத்தினையும் க ற் பி க் கி ன் றார்; பாவேந்தர் - இயற்கைக் கவிஞர். புறாக்களின் பன்னிறத்தைப் படம் பிடித்துக் காட்டும் கவிஞரின் வண்ணங்கள் வருமாறு: