பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 65 இருகிலா இணைந்துபாடி இரையுண்ணும்! செவ்வி தழ்கள் விரியாத தாமரைபோல் ஓர் இணை! மெல்லியர்கள் கருங்கொண்டை! கட்டி ஈயம்; காயாம்பூக்கொத்து! மேலும் ஒருபக்கம் இருவா ழைப்பூ! உயிருள்ள அழகின் மேய்ச்சல் - அழகின் சிரிப்பு, புறாக்கள், ப. 42. கருங்குரங்குகளின் அகவாழ்வினைக் கூறிக் கற் பொழுக்கத் திண்மையின் எல்லையினைக் கருத்தோட்கர வீரன்’ என்னும் சங்கப்புலவர் (குறுந். 66) வற்புறுத்தி யுள்ளார். இயற்கைக் கவிஞர் பாவேந்தனார் புறாவின் ஒழுக்கத்தினைக் கூறுமுகத்தான் மனித சமுதாயத்தின் களைகளுக்கு மாற்றுக்கூறி அறிவுரை புகட்டுகின்றார். அப் பாடல் வருமாறு: ஒருபெட்டை தன் ஆண் அன்றி வேறொன்றுக் குடன்படாதாம்; ஒருபெட்டை மத்தாப்பைப்போல் ஒளிபுரிந்திட நின்றாலும் திரும்பியும் பார்ப்பதில்லை வேறொருசேவல்! தம்மில் ஒருபுறா இறந்திட்டால்தான் ஒன்று மற்றொன்றை நாடும்! - அழகின் சிரிப்பு, புறாக்கள், ப. 43. கற்புடன் வாழமுடியாதபடியும், சில புறாக்கள் செய்வ துண்டு. ஒரு சில புறாக்கள் தவறுதலாகத் தவறி நடக்கும் சில மனிதர்களிடமிருந்து தகாத பாடத்தைக் கற்றுக் கொண்டு விட்டனவாம். பெண்புறா வருந்தும்வண்ணம் தவறிழைக்கும் ஆண்புறா அப்பழக்கத்தைக் கவலை மிக்க மக்களிடமிருந்தேதான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும். அவள் தனி ஒப்பவில்லை; அவன் அவள் வருந்தும் வண்ணம் தவறிழைக்கின்றான் இந்தத்