பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் தகாதசெயல் தன்னை, அன்பு தவழ்கின்ற புறாக்கள் தம்மில் ஒருசில தறுதலைகள் கவலைசேர் மக்களின் பால் கற்றுக்கொண்டிருத்தல் கூடும் - அழகின் சிரிப்பு, புறாக்கள், ப. 44. தலைதாழ்த்திக் குடுகுடென்று ஓடிவந்து தன்னைச் சுற்றும் ஆண் புறாவைக் கொலை பாய்ச்சும் கண்ணால் பெண்புறா திரும்பிப் பார்த்து இங்கு வா’ என்றழைக்கும். மலை காட்டி அழைத்தாலுந்தான் மையல் உற்றார் மறுப்பாரோ? என்று கூறும்போது குறிஞ்சிப்புணர்தல் கூறப் படுதலை உணரலாகும். தலைதாழ்த்திக் குடுகுடென்று தனைச்சுற்றும் ஆண் புறாவைக் கொலைபாய்ச்சும் கண்ணால், பெண்ணோ குறுக்கிற்கென்றே திரும்பித் தலைநாட்டித் தலையைக் காட்டி "இங்குவா என அழைக்கும் மலைகாட்டி அழைத்தா லுங்தான் மறுப்பாரோ மையல் உற்றார் - அழகின சிரிப்பு, புறாக்கள், ப. 44 தாய் இரையுண்டு கூட்டிற்குச் சென்று அங்குவதியும் தன் குஞ்சுகளின் வாயில் அவ்விரையைச் செலுத்தும். குஞ்சு தாயின் வாய்க்குள் தன் முக்கை வைக்கும். தாய் தான் சாப்பிட்டதைக் கக்கித் தன் குஞ்சின் குடல் நிரப்பும். தாய் ஊட்டி ஒய்ந்ததும் தந்தை ஊட்டும். இவ்வாழ்வு அன்பிற்கோர் அடையாளமான வாழ்க்கையாகும். தாய் இரை தின்ற பின்பு தன்குஞ்சைக் கூட்டிற்கண்டு வாயினைத் திறக்கும்; குஞ்சு தாய்வாய்க்குள் வைக்கும் மூக்கைத்