பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் - 67 தாய் அருந்தியதைக் கக்கித் தன்குஞ்சின் குடல்நி ரப்பும்! ஓய்ந்ததும் தந்தை ஊட்டும்! அன்புக்கோர் எடுத்துக் காட்டாம்! -அழகின் சிரிப்பு, புறாக்கள், ப. 44. வானத்திற் சுழற்றிய கூர்வாள் போலப் புறாக்கள் கூட்டமாய்ப் பறந்து போகும். இவ்வாறு உரிமையுடன் வானிற் பறந்து திரிபவை மாலை நேரத்திற் கொத் தடிமைகள் போலக் கூட்டை வந்தடையும். வேலன் கூட்டினை வந்து சாத்தினான். வண்ணம் குழைத்துத் தீட்டப்பட்ட ஒவியம் திரையிட்டு மறைக்கப்பட்டுவிட்டது என்கிறார். * கிளி கிளியினைக் கவிஞர் வருணித்துள்ள பாடலைப் படிக்கும்பொழுது, கோலக்கிளியே நம்கண் முன்னர் வந்து: நிற்கின்றது. இலவின் காய் போலும் செக்கச் செவேலென இருக்கும் மூக்கும் இலகிடு மணத்தக்காளி எழில்ஒளி செங்காய்க் கண்ணும் நிலைஒலி தழுவும் மாவின் நெட்டிலை வாலும், கொண்டாய்! பலர் புகழ் கின்ற பச்சைப் பசுங்கிளி! வாராய்! வாராய்! -அழகின் சிரிப்பு, கிளி, ப. 46. கிளியின் இருவகைப் பேச்சினைக் குறிப்பிடும்போது, கணியிருப்பக் காய் கவரும் மனிதர் மடைமையினைக் கவிஞர் சாடுகின்றார்.