பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 கவிதைகளில் வடித்த திறம் வியத்தற்குரியது. காலை யிளம் பருதியிலும், கடற்பரப்பிலும், ஒளிப்புனலிலும், சோலையிலும், மலர்களிலும், தளிர்களிலும், மாலையில் மறையும் மாணிக்கச் சுடரிலும், ஆலஞ்சாலையிற் கிளை தோறும் வீற்றிருக்கும் கிளிகளிலும் அழகென்பாள் கவிஞருக்குக் கவிதை தந்ததாகக் குறிப்பிட்டிருப்பது இயற்கையில் ஈடுபாடு கொண்ட சங்க காலத் தமிழர் மரபின் தொடர்ச்சியே யன்றோ! எனவே, புரட்சிக் கவிஞர் இயற்கையில் தோய்ந்து நின்று அதன் வெளிப் பாடாய் வெளிவந்திருக்கும் இயற்கை’ பற்றிய செய்தி களையெல்லாம் முதல் நாட் சொற்பொழிவில் தொகுத் துரைத்தேன். சிறந்த சொற்களைச் சிறந்த இடங்களிற் பயன்படுத்திச் சிறந்த இடங்களில் அடுக்கி அமைத்த நிலையில் சிறந்த கவிதை உருவாகின்றது. பாரதிதாசன் பாடல் உயிரோவிய மாய் உயர்ந்த இலக்கியமாகத் துலங்குகின்றது. மேலும் இலக்கியம் வாழ்விற்குப் பயன்படவேண்டும். ஒர் உயர்ந்த உட்கோள் கொண்டு கவிதையை வடிப்பது புரட்சிக் கவிஞரின் வாடிக்கையாகும்.

  • வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா? மகராசர்கள் உலகாளும் நிலையாம் எனும் நினைவா? கொலைவாளினை எடடா, மிகு கொடியோர் செயலறவே! குகைவாழ் ஒரு புலியே! உயர்குண மேவிய தமிழா! இலையே உணவிலையே, கதிஇலையே, எனும் எளிமை இனிமேலிலை, எனவேமுர சறைவாய்'

என்று புரட்சிக் கவிஞர், இலக்கியம் கற்பது வாழ்க்கைப் பயன்பாட்டிற்காக என நிறுவுவதனைக் காணலாம். மூன்றாம் நாள் சொற்பொழிவில் இயக்கம்' என்ற தலைப்பில் யான் ஆற்றிய சொற்பொழிவில் பாரதிதாசன் அவர்களைப் புரட்சிக் கவிஞராகப் படம் பிடித்துக் காட்டி யுள்ளேன். புரட்சிக் கவிஞர் என்றவுடனே அவருடைய தமிழ்ப்பற்றும், இ ன ப் ப ற் று ம், தன் மானவுணர்வும்,