பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#68 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் காட்டினில் திரியும்போது கிரீச்சென்று கழலு கின்றாய்; கூட்டினில் நாங்கள் பெற்ற குழந்தைபோல் கொஞ்சு கின்றாய்! வீட்டிலே தூத்தம் என்பார் வெளியிலே பிழைப்புக் காக ஏட்டிலே தண்ணிர் என்பார் உன்போல்தான் அவரும் கிள்ளாய்! -அழகின் சிரிப்பு, கிளி, ப. 48. இருள் இறைவன் படைப்பில் எதுவுமே வீணாகப் படைக்கப் பட்டதில்லை. வெயிலின்றேல் நிழல் அருமையைத் துய்க்க முடியாது. அதுபோல் ஒளியின் பெருமையினை அறிய இருள் துணை செய்கின்றது. ஆடி ஒடி வாடி அலுத்துப்போய் இருக்கும் வைய மக்களை 6թւգ- அணைக்கிறது இருள். அடிக்கடி உடையில் மாற்றம் பண்ணுவாய் இருளே, உன்றன் பகல்உடை தங்கச் சேலை! வெண்பட்டாம் இராச் சேலைமேல் வேலைப்பா டென்ன சொல்வேன்! -அழகின் சிரிப்பு, இருள், ப. 50. என்று இருளைப் பெண்ணாகக் காண்கிறார். இருள் உறையும் இடங்களைக் கூறும்போது, உயர்ந்துள்ள அழகு மூக்கின் இருபுறம் உறைவாய்; மங்கை கயல்விழிக் கடையில் உள்ளாய் -அழகின் சிரிப்பு, இருள், பக். 52.