பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 69. சிற்றுார் சிற்றுார் நாட்டின் செல்வம்; உயிர் நாடி. அதனை வருணிக்கிறார் கவிஞர். நன்செயைச் சுற்றும் வாய்க்கால் நல்லாற்று நீரை வாங்கிப் பொன்செயும் உழவு செய்வோன் பொழுதெலாம் உழவு செய்தேன் என்செய்தாய்! என்ற பாட்டை எடுத்திட்டான்; எதிரில் வஞ்சி முன்செய்த கூழுக் கத்தான் முடக்கத்தான் துவையல் என்றாள் -அழகின் சிரிப்பு, சிற்றுார், ப. 57 என்று சிற்றுாரையும், அங்கு வாழும் உழவர்களின் இன்ப, ஏழ்மை நிலையினையும், அவர்களின் உழைப்பின் பெருமை. யினையும் படம் பிடிக்கிறார் இயற்கைக் கவிஞர். பட்டணம் சிற்றுாருக்கு மறுதலையான காட்சி வழங்குவது. பட்டணம். இயற்கையின் உயிர்கட் குள்ளே மனிதன்தான் எவற்றினுக்கும் உயர்ச்சியும் தான் அறிந்த உண்மையை உலகுக் காக்கும் முயற்சியும் இடைவிடாமல் முன்னேற்றச் செயலைச் செய்யும் பயிற்சியும் உடையான் என்று பட்டணம் எடுத்துக் காட்டும்! -அழகின் சிரிப்பு, பட்டணம், பக். 58 என்று பட்டணத்தின் சிறப்பை விளக்குகின்றார் கவிஞர்.