பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–70 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வடைமக்கள் சிட்டுப் போலப் பறப்பார்கள் பயனை நாடி - -அழகின் சிரிப்பு, பட்டணம், ப. 58. என்று நகர மக்களின் இயந்திர வாழ்க்கையை விளக்குவார். உள்ளத்தில் உள்ளதை ஏட்டில் வடிக்கும் அறிஞர்கள் கூட்டமும் கொள்கை ஒன்றிருக்க வேறு கொள்கைக்கே அடிமையாகும் வெள்ளுடை தரித்த எழுத்தாளர்கள் கூட்டமும் பட்டணத்தில் காணலாம். கொள்கை ஒன்றிருக்க வேறு கொள்கைக்கே அடிமையாகும் வெள்ளுடை எழுத்தா ளர்கள் வெறுப்புறும் செயலும் கண்டேன் -அழகின் சிரிப்பு, பட்டணம், பக். 59 என்ற பட்டணத்தின் போலி வாழ்வைப் படம் பிடிக்கிறார். சிற்றுார்க்கும் பேரூர்க்குமுள்ள வேறுபாட்டினைக் கவிஞர் பின்வருமாறு கூறுவார். இயற்கையின் எழிலையெல்லாம் சிற்றுாரில் காண ஏலும் செயற்கையின் அழகை யெல்லாம் பட்டணம் தெரியக் காட்டும் முயற்சியும் முழுதுழைப்பும் சிற்றுாரில் காணு கின்றேன்; பயிற்சியும் கலையு ணர்வும் பட்டணத் திற்பார்க் கின்றேன்! -அழகின் சிரிப்பு, பட்டணம், பக். 60 இவ்வாறாக இயற்கைக் கவிஞர், பாவேந்தர் பாரதி தாசன் அழகின் சிரிப்பில் இயற்கையைப் படம் பிடிக்கிறார். இந்நூல் இயற்கையின் அழகைப் பாடிய பாவேந்தரின் ஈடுபாட்டை விளக்குகிறது.