பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 71 1. இயற்கையை அழகுக்காகவும் 2. இயற்கையின்மூலம் மக்களுக்கு அறிவூட்டவும் இப்பகுதியில் கவிஞர் இயற்கையைப் பயன்படுத்தியுள்ளார். *அழகின் சிரிப்பு என்ற நூலின் தலைப்பு மிகப் பொருத்த மாகவே அமைந்துள்ளது. பாவேந்தர் பாரதிதாசன் அழகின் சிரிப்பில் மட்டு மல்லாது பிற கவிதை நூல்களிலும் இயற்கையைப் பற்றிப் பாடியுள்ளார். அவற்றை இங்குக் காண்போம். தென்றல் இழுத்திழுத்து மூடுகின்றேன் எடுத்தெடுத்துப் போடு கின்றாய் பழிக்க என்றன் மேலாடையைத் தென்றலே-உன்னைப் பார்த்து விட்டேன் இந்தச்சேதி ஒன்றிலே -பாரதிதாசன் கவிதைகள், நான்காம் தொகுதி, ப. 31. என்று தென்றலைப் பாடுகிறார். அழகின் சிரிப்பில் பொதிகைத் தென்றலின் இனிமையைப் பாடிய கவிஞர் இங்குத் தென்றலின் தெவிட்டாத இன்பச் செயலைப் பாடுகிறார். அடுத்துத் தமிழர்தம் பகுப்புமுறையைக் காற்றைப் பலவிதமாக-காற்று வரும் திசை குறித்துப் பெயரிட் டழைப்பதைக் குறிப்பிடுமுகமாக, காற்றென்ற பேர் இருக்கத் தென்றலென்ற பேர் ஏன்? சிறப்புநிலை காட்ட அன்றோ? -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப, 102. என்று பாடுகின்றார். தென்றலின் அருமையை - இனிமையைப் பற்றிக் கூறும்போது,