பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வேகவைக்கும் கோடை-அதை விழுந்தவிக்கும் தென்றல் -பாரதிதாசன் கவிதைகள் தொகுதி 3, ப. 149. என்று நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பதை விளக்குகிறார். இரண்டாம் தொகுதியில் இடம்பெற்றுள்ள தென்றல் என்னும் கவிதை, கருத்தாழமுடையது. கற்பனையுணர்ச்சி கெழுமியது. தென்றலைத் திறம்படக் கவிஞர் காட்டு கின்றார். அந்தியில் இளமுல்லை சிலிர்க்கச் செந்நெல் அடிதொடரும் மடைப்புனலும் சிலிர்க்க என்றன் சிங்தை உடல் அணு ஒவ்வொன்றும் சிலிர்க்கச் செல்வம் ஒன்று வரும்! அதன்பேர் தென்றற்காற்று என்று நவமான - நயமான முறையில் கிளத்துகின்றார். கவிஞர் அந்தியில் கொல்லையில் மனைவியாரோடு இருந்தார். தென்றல் இதமாய் வீசிற்று. வெந்தயத்துக் கலயத்தைப் பூனை தள்ளி விட்டதெனக் கவிஞர்தம் மனைவியார் அறைக்குள் போனார். தனித்திருந்த விசுப்பலகையில் கவிஞர் படுத் தார். பக்கத்தில் அமர்ந்து சிரித்துப் பேசிப் பழந்தமிழின் காற்றோடே காதல் சேர்த்து நிற்காமல், பூனையை ஒட்டச் சென்ற பூவையார்மீது அடங்காத சினம் வந்தது கவிஞருக்கு. பிரிவால் வேதனை யுற்றார் கவிஞர். மனைவியாரின் உடற் குளிர்ச்சி, மென்மை, மணம் இவற்றை துகர நினைவு கொண்டார். பின்னர் நடந்தது என்ன? தெரியாமல் பின்புறமாய் வந்த பெண்ணாள் சிலிர்த்திடவே எனைநெருங்கிப் படுத்தாள் போலும்: சரியாத குழல் சரிய லானாள் போலும்! தடவினாள் போலும் எனைத் தன் க ரத்தால்!