பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 73 புரியாத இன்பத்தைப் புரிந்தாள் போலும்! புரியட்டும் என இருந்தேன்; எதிரில் ஓர்பெண் பிரிவுக்கு வருந்தினே னென்றாள் ஒகோ! பேசுமிவள் மனைவிமற் றொருத்தி தென்றல்! டபாரதிதாசன் கவிதைகள், தொகுதி 2, ப. 28. கண்முன் காட்சித் திரையினை விரிக்கும் அழகுச் சித்திரம் இது! நிலவு

நிலவு எல்லாக் கவிஞர்களையும் கவர்பொருளாக

அமைந்துள்ளது. அந்நிலவினை எல்லாச் சமயத்தாரும் போற்றி வணங்குவர். இதை, தமது நான்காவது கவிதைத் தொகுதி (பா. க. தொகுதி 4)யில் பாவேந்தர், பல சமயச் சிறுவர்களும், சுயமரியாதை இயக்கச் சிறுவனும் கூறு முகமாக அமைத்துள்ளார். இங்கு அவருடைய பொது வுடைமைத் தத்துவம் புலனாகும். பாடல் வருமாறு: துருக்கச் சிறுவன் ...மூன்றாம் பிறையாய்த் தோன்றுங்காலை என்கூட்டத்தார் உன்னைத் தொழுவார் ஆதலாலே அழகுகிலவே துருக்கருக்குச் சொந்தப் பொருள் !ே கத்தோலிக்கச் சிறுவன் கன்னி மரியாள் உன்மேல் நிற்பாள் ஆதலாலே அழகு கிலவே கத்தோலிக்கச் சொத்து தோன்! இந்துச் சிறுவன் எங்கள் சிவனார் முடியில் இருப்பாய் ஆதலாலே அழகு கிலவே இந்து மதத்தார் சொந்தப் பொருள் நீ! சுயமரியாதைச் சிறுவன், மற்றப் பிள்ளைகளைக் குறித்து பா-5