பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ...யாவரும் மனிதர் என்பது தெரிந்தால் நிலவும் பொதுவே என்பது தெரியும் அறிந்து வாழ்வீர் அன்பர் கூட்டமே. - -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, பக், 225-226. மாலையில் ஒளி மங்கி, இருள் தன் போர்வையை எங்கும் விரித்த பின்னர், இருட்பகை போக்கிட எழுகின்ற எழில் நிலாவினைப் பாடிய கவிஞர் பலர். ஆனாலும், நம் கவிஞர் நிலவை வண்ணமுற வருணிக்கின்றார். அவ்வருணனையின் இடையே தமது கருத்தினையும் பொருத்தமுறப் புகுத்தியுள்ளார். அழகாட்சி புரியும் நிலாப் பற்றிய அவர் கவிதைகளில் மூன்றினைப் படிக்கும் பொழுது அவரை உலகக் கவிஞர் (Universal Poet) என்று ஒரு மனமாகப் பாராட்ட வேண்டியிருக்கிறது. கற்பனை (Imagination), 2–6&rff 49 (Emotion), auto-auth (Form) கருத்து (Content) ஆகிய நான்கும் அமைந்த அவர் பாடல்: லேவான் ஆடைக்குள் உடல்ம றைத்து கிலாவென்று காட்டுகின்றாய் ஒளிமுக த்தைக் கோல முழுதுங் காட்டி விட்டால் காதற் கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ தோன்! சொக்கவெள்ளிப் பாற்குடமோ? அமுத ஊற்றோ காலைவந்த செம்பரிதி கடலில் மூழ்கிக் கனல்மாறிக் குளிரடைந்த ஒளிப்பி ழம்போ! அந்தி யிருளாற் கருகும் உலகு கண்டேண்; அவ்வாறே வான் கண்டேன்; திசைகள் கண்டேன், பிந்தியங்தக் காரிருள்தான் சிரித்த துண்டோ? பெருஞ்சிரிப்பின் ஒளிமுத்தோ கிலவே தோன்! சிந்தாமல் சிதறாமல் அழகை யெல்லாம் சேகரித்துக் குளிரேற்றி ஒளியும் ஊட்டி