பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப் பிரமணியன் 75 "இந்தா என்றே இயற்கை அன்னை வானில் எழில்வாழ்வைச் சித்திரித்த வண்ணங் தானோ! உனைக்காணும் போதினிலே என்னு ளத்தில் ஊறிவரும் உணர்ச்சியினை எழுதுதற்கு கினைத்தாலும் வார்த்தை கிடைத்திடுவதில்லை நித்திய தரித்திரராய் உழைத்து ழைத்துத் தினைத்துணையும் பயனின்றிப் பசித்த மக்கள் சிறிதுகூழ் தேடுங்கால் பானை ஆரக் கனத்திருந்த வெண்சோறு காணும் இன்பம் கவின்கிலவே! உனைக்காணும் இன்பங் தானோ! -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 20. இப்பாடலின்கண் அமைந்துள்ள நிலவைக் காணும் இன்பம் வெண்சோறு காணும் இன்பம்" என்று பாடி யிருப்பது நனி நினைந்து போற்றற்குரியதாகும். இயற்கை வருணனையே என்றாலும், மக்கள் வாழ்வுதான் உயிர் நாடி, உரிப்பொருளே முதலிடம் பெறுவது என்கிற சங்கத் தமிழ் மரபு, சித்தர் பாட்டு இப்பாடலில் விளக்கமுறக் காணலாம். o பகுத்தறிவு நினைவுடன் பாடிய இன்னொரு பாடல்: முழுமைகிலா! அழகுகிலா ! முளைத்தது விண்மேலே-அது பழமையிலே புது நினைவு பாய்ந்தெழுந்தாற்போலே! அழுதமுகம் சிரித்தது போல் அல்லி விரிந்தாற்போல்-மேல் சுழற்றி எறிந்த வெள்ளித்தட்டுத் தொத்திக் கிடந்தாற்போல். -இளைஞர் இலக்கியம். நிலாவின் அழகு அனைத்தையும் அப்படியே சித் திரித்துக் காட்டுகிறது. குழந்தைகளுக்குப் பாடும்போது,