பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் வானத்து ரார் வந்தார் - அவர் மத்தாப் பைப்போல் கின்றார் மீனுக் கெல்லாம் சொன்னார்- மேல் மினுக்க வேண்டும் என்றார் நானும் அவரைப் பார்த்தேன்-அவர் தாமும் என்னைப் பார்த்தார் ஏனோ வந்து குலவார்?-கீழ் இறங்கு வாரா கிலவார்? -இளைஞர் இலக்கியம், ப. 32. என்றும், வில்லடித்த பஞ்சு விட்டெறிந்த தட்டு முல்லைமலர்க் குவியல் முத்தொளியின் வட்டம் கல்வயிர வில்லை கானில விளக்கு மெல்ல இங்கு வாராய் வெண்ணிலாவே நேராய் விற்றிருக்கும் அன்னம் வெள்ளைத்தா மரைப்பூ ஊற்றிய பசுப்பால் உண்ணவைத்த சோறு ஆற்றுகடுப் பரிசில் அழகுவைத்த தேக்கம் மாற்றமில்லை வாராய் வானிலவே நேராய் -இளைஞர் இலக்கியம், ப. 36. என்றும் நிலவின் எழிற்றன்மையைப் பல நிலைகளில் விளக்குகின்றார்.