பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் - դդ லேவான்மீது தோன்றும் கோலமென்ன சொல்வேன் தோழி லேவான்மீது... ஞாலமெங்கும் குளிரும் ஒளியும் நல்கும் திங்கள் அங்குக் கண்டேன் லேவான்மீது... முத்துக்குவியல் இறைந்த துண்டோ? முல்லைக்காடோ கூட்ட வண்டோ? புத்தம் புதுகிலா விண் சிரிப்புப் புனிதத் தாரகை எனத் துளிர்த்ததோ? லேவான்மீது... அழகு காட்டி இயற்கை அன்னை அன்பு கொள்ளச் செய்தாள் என்னை பழகப் பழக, என்கண் முன்னே பண்ணும் புதுமை என்னே! என்னே! லேவான்மீது --தேனருவி, ப. 92. என்று நிலவின் அழகை விளக்குகின்றார். திங்கள் ஒளி பெறல் செழுங்கதிர் வரவால் (காதலா? கடமையா?, ப.19) என்று அறிவியல் உண்மையை விளக்குகின்றார். மண்காண முகில் கிழித்து நிலவுவந்து மற்றவர்கள் நமைக்கான வைத்தல் காண்பாய்! -பாண்டியன் பரிசு; இயல் 38, ப.65. என்று நிலவின் தோற்றத்தையும், ஒளியையும் குறிக் கின்றார். இவ்வாறாகப் பாவேந்தர் - இயற்கைக் கவிஞர் நிலவின் அழகில் ஈடுபட்டுக் கவிதை தந்துள்ளார். காலை வருணனை காலை புலர்தலையும் கதிரவன் தோற்றத்தையும் கவிஞர் கவிதையாக்கும் நிலையினை இப்பகுதிக்கண் காண்போம்.