பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சீர்திருத்த நோக்கும் விளக்கமுறும். திங்களொடும் செழும்பருதி தன்னோடும், விண்ணோடும் உடுக்களோடும் மங்குல் கடல் இவற்றோடும் பிறந்தது தமிழ்' என்றும், அந்தத் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர் தமிழர் என்றும் குறிப்பிட்டுள்ளார். திங்கள் போலும், ஞாயிறு போலும், கடல் போலும் மிகப் பழமையுடையவை தமிழும் தமிழினமும் என்று குறிப்பிடும் பாரதிதாசன் அவர்களின் புதுமை நோக்கைக் காணலாம். முழுமை நிலா அழகு நிலா முளைத்தது விண்மேலே, அது பழமையிலே புது நினைவு பாய்ந்தெழுந்தாற் போலே' என்று பாரதிதாசன் அவர்களே பிறிதோர் பாடலில் குறிப்பிட்டிருப்பது அவர்தம் புதுமை நோக்கினைப் புலப்படுத்தும். "காதல் ததும்பும் கண்ணாளன்தனை, கோதை ஒருத்தி கொச்சைத் தமிழால் புகழ்ந்தாள் என்று பொறாமல் சோர்ந்து வீழ்ந்தான்' எனும் பாடலடிகள் அவர்தம் தமிழ்ப் பற்றினை விளக்கும். ' இழந்த பழம்புகழ் மீளவேண்டும் நாட்டில் எல்லோரும் தமிழர்களாய் வாழவேண்டும் வழிந்தொழுகும் அவைத்தமிழே பெருகவேண்டும் மாற்றலர்கள் ஏமாற்றம் தொலையவேண்டும் விழுந்த தமிழ்நாடு தலைதுாக்க என்றன் உயிர்தனையே வேண்டினும் தருவேன்' என்று பாவேந்தர் பாடியிருப்பது உன்னி உணரத்தக்கது. பெண்ணுரிமை பாடிய பெருங்கவிஞர் பாரதிதாசன் ஆவர். பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே' என்று பெண்ணுரிமை பாடி, கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலை யும் ஓர் கடுகாம்' என்று காதலின் சிறப்புரைத்து, கோட்டைப் பவுன் உருக்கிச் செய்த குத்து விளக்கினைப் போன்ற குழந்தைகள்' என்று குழந்தை நலம் கூறி, எனை மணந்தார் இறந்தார், என் குற்றமல்ல, இறந்தவுடன்