பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் விடிந்தது! தங்க வெயில் வந்தது! மடிந்தது காரிருள்! மடிந்தது பனிப்புகை! பசும்புல் கதிரொளி பட்டு விளங்கின! விசும்பிற் காக்கைகள் பொன்னென விளங்கின -பாரதிதாசனின் காதல் பாடல்கள், ப. 183. என்று விடியலையும் அப்போது தோன்றும் காட்சியினையும் விளக்குகிறார். இளங்கதிர் கிழக்கில் இன்னும் எழவில்லை இரவுபோர்த்த இருள் நீங்கவில்லை ஆயினும் கேள்வியால் அகலும் மடமைபோல் கள்ளிரவு மெதுவாய் நடந்து கொண்டி ருந்தது! தொட்டி நீலத்தில் சுண்ணாம்பு கலந்த கலப்பென இருள் தன் கட்டுக் குலைந்தது. -குடும்ப விளக்கு, ப.5. எழுந்தது பரிதிக் குழந்தை! கடலின் செழுலேத்தில் செம்பொன் துரவி! கரிய கிழக்குவான் திரையில், வெளுப்பும் மஞ்சளும் செம்மணி வண்ணமும் ஒளிசெயும்! எழும் வளைந்து நெளிந்து விழும்கடல் அலையே அழகிய தென்பாங் காடற் கலையே புதிய காலையில் புதிய பரிதியின் எதிரில் அடடா சதிர்க்கச்சேரி: கிழக்கில் திராவிடர்க்குக் கிடைத்த கடல்முரசு முழக்குவோன் இன்றி முழங்கும் இசையரசு! -குடும்ப விளக்கு, தொகுதி 3, ப.40. என்று காலையில் எழும் கதிரோனையும், கடலின் இசைக் கச்சேரியையும் குறிப்பிடுகிறார். மாங்கனியும் தோன்-அந்த வானம் எனும் தோப்பில்? m -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 147.