பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக் டர் சி. பாலசுப்பிரமணியன் 79 என்று வானத்தைத் தோப்பாகவும், கதிரை மாங்கனி யாகவும் உருவகம் செய்கிறார். கிழக்கு மலரணையில் தூங்கிக் கிடந்து விழித்தான்; எழுந்தான்; விரிகதிரோன் வாழி! -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 167. என்று கதிரவன் தோற்றத்தை வருணித்து, அவன் வரவால், எழுந்தன. புட்கள்; சிறகடித்துப் பண்ணே முழங்கின! ஏருழவர் முன்செல் எருதை அழிஞ்சிக் கோல்காட்டி அதட்டலும் கேட்டிர் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 167 என்று கூறுகிறார். f தங்கம் உருக்கிப் பெருவான் தடவுகின்றான் செங்கதிர்ச் செல்வன்! -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 168. என்று கதிரோனின் செயலை விவரித்து, மக்களை விளித்து, தேர்கலி கொள்ள அமர்ந்து செழும்பரிதி ஆர்கலிமேற் காட்சி அளிக்கின்றான் கீழ்த்திசையில் ஊர் மலர்ந்தும் உங்கள் விழிமலர ஒண்ணாதோ? -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 168. என்றும், மன்னிய கீழ்க்கடல்மேல் பொன்னன் கதிர்ச்செல்வன் துன்னினான் இன்னும்நீர் தூங்கல் இனிதாமோ? -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 169. என்றும் கூறி மக்களை இயங்க வைக்கிறார். மேலும், செஞ்சூட்டுச் சேவல்கள் கூவின கேட்பீரோ மிஞ்சும் இருள் மீது பொன்னொளி வீழ்ந்ததுவே! -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 168. என்றும்,