பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் லே உடையூடு பொன்னிழை நேர்ந்ததென ஞால இருளின் நடுவில் கதிர்பரப்பிக் கோலஞ்செய் கின்றான் இளம்பரிதி! டபாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 169. என்றும், அருவி, மலை, மரங்கள் அத்தனையும் பொன்னின் மெருகுபடுத்தி விரிகதிரோன் வந்தான் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 169. என்றும், காலைக் கதிரவன் கடல் அலைகளில் மேலெல்லாம் ஏற்றும் மெருகின் அசைவையும் என்றும், நடுக்கடலில் இளங்கதிர்தான் நுனிமுளைக்கும் வேளையிலே கதிர்காட்டின் மேற்கினின்று -பாண்டியன் பரிசு, இயல் 62, ப. 176 என்றும், காலையில் கதிரோன் வருகையைக் கூறுகின்றார் கவிஞர். இங்குப் பெரும்பாலான பாடல்களில் தங்கத் தையே உவமை கூறியிருப்பது நோக்கத்தக்கது. இவ்வாறு பாவேந்தர் பாரதிதாசனார் காலைக் கதிரோனைப் பாடியுள்ளார். அக்தி காலைக்கதிரவனையும், ஞாயிற்றையும், பாடிய கவிஞர் கதிரவன் மறையும் நேரமாகிய அந்தியையும் பாடுகின்றார். புனலும் நிலாவொளியும் - அங்குப் புதுமை செய்தே நெளிந்தோடும்! மரங்களில் இனிது பறந்து பறந் தங்கும் இங்கும் அடங்கிடும் பாடிய பறவைகள்