பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப் பிரமணியன் 81 தனி ஒரு வெள்ளிக்கலம் - சிந்தும் தரளங்கள் போல்வன நிலவு நட்சத்திரம் புனையிருள் அந்திப்பெண்ணாள் - ஒளி போர்த்ததுண்டோ எழில் பூத்ததுண்டோ -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 90-91 என்று நிலா ஒளி தோன்றுதலை யும், பறவைகள் கூடுகளில் அடங்குதலையும் கூறுகின்றார். முல்லையிலே சிரித்தபடி தென்றலிலே சொக்கி முன்னடியும் பெயர்க்காமல் இன்னும் இருக்கின்ற பொல்லாத மாலைக்குப் போக்கிடமோ இல்லை -காதல் நினைவுகள் இன்னுமவள் வரவில்லை", ப. 14. என்று கூறும்போது, சங்க இலக்கியங்கள் கூறும் முல்லைநில உரிப்பொருள் இங்குக் கூறப்படுதலை யறியலாம். . காரும் மாலையும் முல்லை. -தொல்; பொருள், 6. என்பதில் இங்கு மாலைப் பொழுது கூறப்படுகிறது. தலைவன் வரவை எதிர்பார்த்து இல்லில் இருக்கின் றாள், தலைவி; வினைமுடித்துத் திரும்பி வருகின்றான் தலைவன். இதுவே முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள். இங்குத் தலைவன் தலைவியை எதிர்பார்த்து இருப்பது போல் கூறப்பட்டுள்ளது. அக இலக்கிய மரபில் பிற் காலத்தில் நேர்ந்த மாற்றங்களில் இதுவும் ஒன்று எனலாம். வானவில் எய்யா வரிவில் -அகம். 192. வானத்துக் குறைவில் -பெரும்பாணா. 292. விசும்பு அணிவில் -அகம். 210. என்று சங்க இலக்கியங்கள் வருணிக்கும் வானவில்லை இயற்கைக் கவிஞர்-பாவேந்தர் பாரதிதாசனார் அவர்கள் சித்திரம் தீட்டும் காட்சி இதோ!