பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் புதுமை இது! வானிடைக் கண்ட அவ்வோவியம் போய் முகிற்புனலிலே நொடிதோறும் கரைந்ததே! இது அது எனச்சொல்ல ஏலா தொழிந்ததே! இன்பமும் துன்பமும் யாவுமே இவ்வண்ணம் கதுமெனத் தோன்றிடும் மறைந்திடும் என்பதைக் கண்ணெதிர்க் காட்டவரும் விண் எழுது கவிதையாம் அது கமக்குத் தெரியும்; அன்றியும் கவிஞருளம் அவ்வான விரிவினும் பெரிதன்ப தறிவமே! -பாரதிதாசன் குயில் பாடல்கள், ப. 25. வானவில்லை வருணித்து, வானவில் போன்று மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் கதுமெனத் தோன்றிடும் என்று கூறுகிறார். கவிஞருளம் வா ன வி ரி வி னு ம் பெரிதானது என்று கூறுவது உண்மையாதலைப் பாவேந்தர் பாடல்கள் மூலம் உணரலாம். வான் எங்கும் பரவிப் பரந்து, உலகிற்குக் கூரையாக அமைந்: திருக்கும் வானப்பெருவெளியைப் பாவேந்தர், ஒவ்வொரு நினைவும், உன்றன் உலகிற்கே! செயல் ஒவ்வொன்றும் இவ்வைய நன்மைக்கே என் றெண்ணுதல் பெற்றாயாகில் செவ்வையாம் நினைவுண்டாகும் செயலெலாம் நல்லவாகும்! அவ்வானின் நோக்கம் காண்பாய்! அதன்பெரும் செயலைக் காண்பாய்! - காதலா? கடமையா? ப. 132. என்று விளக்கி, தமக்கு என முயலா கோன்தாள், பிறர்க்கு என முயலுகர் உண்மை யானே -புறம். 182.