பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 83 என்று கூறும் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாட்டிற் கேற்பக் கூறுதலை யறியலாம். - வான் உலக நன்மையை ஆற்றுதல் போல, மனிதர் களும் உலக நன்மைக்காக மனம், மொழி, செயல்களால் பாடுபடவேண்டுமென்று கூறுகின்றார். இங்குப் பாவேத் தரின் அற உள்ளமும் பொதுவுடைமைப்பற்றும் புலப் படுகின்றன. மழை கெடுப்பது உம் கெட்டார்க்குச் சார்வாய்டிற் றாங்கே எடுப்பது உம் எல்லாம் மழை. -குறள் 5. என்ற பொது மறைக்கேற்ப, எங்கும் உளதுமழை என்றும் உளதுமழை தங்கும் உலகுயிரைச் சாவாது காக்குமழை -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, பக். 104. என்று உலக உயிர்களைச் சாவாது காப்பாற்றுவது மழை யென்று புகழ்கிறார். மழையே அமிழ்து: மழையே உலகை அழியாது காப்பாற்றும் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 101. என்றும் பாடுகிறார். மழையைப் போற்றுமுகமாக, மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் நாம நீர் வேலி உலகுக் கவனளிபோல்