பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{34 புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மேல்நின்று தான்சுரத்த லான் என்றிளங்கோ தானுரைத்த செய்யுள் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 96. என்று இளங்கோவடிகளின் இர்சால் சிலப்பதிகார மேற்கோளை யெடுத்துக் காட்டுகிறார். வான்கின் றிமிழும் மழைதான் அமிழ்தென்று ரீ நன்றறிந்தாயா நேரிழையே இப்போது? -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 97. என்று மழையே அமிழ்து என்று மழையின் பெருமையை உரைக்கின்றார். o மழையுண்டாகும் முறையையும், மழைபொழியும் ஒழுங்கையும், மாக்கடல் முகந்து, மாதிரத்துஇருளி மலர்தலை உலகம்புதைய, வலன் ஏர்பு பழங்கண் கொண்ட கொழும்பல் கொண்மூ போழ்ந்த போலப்பல உடன் மின்னி தாழ்ந்த போலநனி அணி வந்து, சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி, இடியும் முழக்கும் இன்றி, பாணர் வடிஉறு கல்யாழ் நரம்புஇசைத் தன்ன இன்குரல் அழிதுளி தலைஇ, கன்பல பெயல்பெய்து கழிந்த பூங்ாறு வைகறை -அகம், 374. என்ற பாடலில் இடைக்காடனார் என்னும் புலவர் வனப் புறக் கூறியுள்ளார்.