பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் - 85. மேகத்திரள் கடலுள் சென்று நீரை முகந்துகொள் கின்றது. நீர் ஏறஏற நிறத்தின் கருமைச்செறிவும் மிகுகிறது; அகன்ற உலகம் முழுவதும் இருளுமாறு திசை யெலாம் பரவிக் கவிகின்றது. கார்மேகம், விண்ணகப் பரப்பிலே சுழன்று முழங்குகின்றது. விண்ணைப் பிளப்பது போல மின்னற் கொடிகளை வீசுகின்றது. நிலத்திற்கு அண்மையில் தாழ்ந்து வந்து முற்றிக் கவிப்பது போல் மழை பொலிகிறது. ஆனால் விண்ணகத்தின் மேற்பரப்பில் இருந்த இடியின் கடுமுழக்கம் இங்கே இல்லை; மழைத் துளிகள் ஒழுங்குபெற இழுமென விழுந்திடுகின்றன; அவற்றின் இன்னோசை இனிய யாழ் நரம்பிசை போல் கேட்கின்றது என்பது அப்பாடல் கருத்தாகும். இதுபோன்ற கருத்தமைந்த பாடலைப் பாவேத்தர் பாடியுள்ள திறம் காண்போம். முற்றும் கேள்: வெப்பம் முகந்தரீ ரேமுகிலாம் குற்றமறக் கொண்டமீர் கொண்டல்; அக்கொண்டலோ மேற்போய் இருந்தங்லை விண்வான் விசும்பென்பார் காற்றால் கருமைபெறக் காராகும்; காரிதான் மழைக்கும் கிலையில் மழையாம்; மழைதான் தழைய அமிழ் உண வாவது தான் அமிழ்து -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 103. என்று மழை உண்டாகிப் பெய்யும் நிலையைக் குறிப்பிடு கின்றார் .