பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் ஆலமரசும் விளவும் மாவும் இல்லை; ஆற்றோரம் காற்றில்லை; அனைத்தும்பாலை -குறிஞ்சித்திட்டு, ப. 42. என்று பாலை நிலத்தை விளக்குகிறார். மயில் இயற்கையாக நிகழும் நிகழ்ச்சியின்மேல் கவிஞன் தன் குறிப்பினை ஏற்றிக் கூறுதல் தற்குறிப்பேற்றவணி என்பது. கவிஞர் நீண்ட கழுத்துடைய மயிலோடு பேசும் பேச்சில் நகைச்சுவை கொப்பளிப்பதனைக் காணலாம். ஊடே ஒர் உளவியல் உண்மையையும் அவர் உணர்த்துகின்றார். யுேம் பெண்களும் நிகர் என்கிறார்கள்: நிசம் அது! கிசம்! நிசம் கிசமே யாயினும் பிறர்பழி தூற்றும் பெண்கள் இப்பெண்கள்: அவர் கழுத்துஉன் கழுத் தாகுமோ சொல்வாய்! அயலான் வீட்டில் அறையில் கடப்பதை எட்டிப் பாரா திருப்பதற்கே இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம் குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ குறையொன் றில்லாக் கலாப மயிலே! நிமிர்ந்து நிற்க ள்ே கழுத் தளித்தாள்! இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன் மனத்திற் போட்டுவை; மகளிர் கூட்டம் என்னை ஏசும் என்பதற்காக! -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1. என்று கூறி மயிலை விளிக்கின்றார். ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள் ஆயிரம் ஆயிரம் அம்பிறை கிலவுகள் மரகத உருக்கின் வண்ணத் தடாகம் ஆனஉன் மெல்லுடல், ஆடல், உன் உயிர் இவைகள் என்னை எடுத்துப்போயின -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 55.