பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 87 என்று மயிலின் தோகையழகையும், அதன் நிற மேன்மை யையும், அதன் உடல், ஆடல் முதலியவற்றையும் விளக்கு கிறார் பாவேந்தர் பாரதிதாசனார். காக்கையைப் பற்றிக் குறிப்பிடும்போது, காக்கையின் இன உணர்வைப் புலப்படுத்துகிறார். ஆக்கிய சோறு கொஞ்சம் சிந்திக் கிடக்கும்! காக்கை அழைத்துத்தன் இனத்தோடு குந்திப் பொறுக்கும் -காக்கை: 29. என்று தான் மட்டும் உண்ணாத காக்கையின் சிறப்பை விளக்குகின்றார். திசைகளைப் பற்றிக் குறிப்பிடும்போது, கதிர் முளைப்பது கிழக்கு-அதன் எதிர் இருப்பது மேற்கு முதிர்(இமையம் வடக்கு-அதன்' எதிர்க்குமரி தெற்கு -இளைஞர் இலக்கியம், ப. 63. என்று குழந்தைகள் மனம் பற்றுமாறு குறிப்பிடுகின்றார். இட வருணனை

  • முதற்பொருள்" எனப் போற்றப்படும் நிலம் - நில வருணனை பல சங்கப் பாடல்களில் வரும். பாலைக் கலியில் வரும் பாலை நில வருணனை நெஞ்சை உருக்கு வதாகும்.

இயற்கைக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் சஞ்சீவி பருவதத்தின் சாரலைக் குறிப்பிடும்போது, - குயில் கூவிக் கொண்டிருக்கும்; கோலம் மிகுந்த மயிலாடிக் கொண்டிருக்கும்; வாசம் உடையகற். காற்றுக் குளிர்ந்தடிக்கும்; கண்ணாடி போன்றர்ே ஊற்றுக்கள் உண்டு; கனி மரங்கள் மிக்க உண்டு; பூக்கள் மணங்கமழும்: பூக்கள்தோறும் சென்றுதே னிக்கள் இருந்தபடி இன்னிசைபா டிக்களிக்கும்: வேட்டுவப் பெண்கள் விளையாடப் போவதுண்டு