பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 மங்கல நாண், நல்லாடைகள், புனைமலர், குங்குமம், அணிகள் போனதுண்டு. பெண்ணுடலும் இன்னுயிரும் போனதுண்டோ?... வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள் மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ? பாடாத தேனி.க்கள், உலவாத் தென்றல், பசியாத நல்வயிறு பார்த்த துண்டோ?' ' என்று கைம்மைத் துயரைக் குறிப்பிட்டு, "இருட்டறையில் உள்ளதடா உலகம்-சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே' என்று சாதிக் கொடுமை யைச் சாடி, ஒடப்பராயிருக்கும் ஏழையப்பர் உதையப்பு ராகிவிட்டால் ஒர் நொடிக்குள் ஒடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ " என்று பொது வுடைமைத் தத்துவத்தினை விளக்கி, புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்' என்று புத்துலகம் காண விழைந்த அவாவினையும் புலப்படுத்தியுள்ளார். இவ்வாறு புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களைப் பற்றிய எண்ணங்களை இந்நூலில் விரித் துள்ளேன். நூலிற்கு இசைவு வழங்கிய துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் பொ. பா. சுந்தரேசன் அவர்கட்கும். ர்ேசால் ஆட்சிக் குழுவினர்க்கும் நன்றி. தமிழுலகு ஏற்று.

  • + - t f =

எனக்கு ஊக்கம் நல்குவதாக! - சி. பா. 24-12-1986.