பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் காட்டு மறவர்களும் காதல்மணம் செய்வதுண்டு நெஞ்சில் நிறுத்துங்கள்; இந்த இடத்தைத்தான் சஞ்சீவி பர்வதத்தின் சாரல்என்று சொல்லிடுவார் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 1. என்று கூறி ஒரு பெரிய விளக்கம் தருகிறார். இவ்வாறாகப் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் இயற்கையின் இன்பத்தைப் பலவாறாகப் பாடியுள்ளார். மேலும் இயற்கையையும் அமிழ்தாக எண்ணப்படும்போது, பொங்கல் அமிழ்துதான் பொய்யில்லை கட்டிக் கரும்பும் அமிழ்து கனி அமிழ்து முல்லை யரும்பமிழ்து தேன மிழ்து அப்பம் அமிழ்து குழந்தை குதலை மொழியமிழ்து குன்றாப் பழந்தமிழும் பாட்டும் அமிழ்து தமிழ்ப்பண் அமிழ்து திங்கள் அமிழ்து திகழ் ஆவின் பாலமிழ்தே இங்கெனக்கு நீ அமிழ்து நானுனக் கெப்படியோ! வாய்மை அமிழ்து மடிசுமந்து பெற்றுவக்கும் தாய்மை அமிழ்து தனி இன்ப விடமிழ்து தென்றல் அமிழ்து கறுஞ் செவ்விள நீரமிழ்து ஒன்றல்ல எல்லாம் அமிழ்தென் றுரைக்கலாம் -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 3, ப. 43. என்று பாடி வருகிறார்.