பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 89

  • நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை' என்ற பாவேந்தர் கருத்து இங்கு மேலும் வலுப்படுத்தப்படுகிறது.

பொது நோக்கு பாவேந்தர் பாரதிதாசன் இயற்கையை எவ்வெவ்வகை களில் பயன்படுத்தியுள்ளார் எனப் பொதுவாக நோக்கும் போது, அ. கி. பரந்தாமனார் பகுத்துள்ள முறையைப் பின் பற்றலாம். அ. கி. பரந்தாமனார் தமிழ்ப் புலவர்கள் ஐந்து வகையாக இயற்கையைப் பயன்படுத்தியுள்ளதாகப் பகுக்கின்றார்கள். 8 1. இயற்கையளிக்கும் காட்சியழகில் ஈடுபட்டுச் சித்திரிப்பது. 2. இயற்கையை உவமையில் பயன்படுத்துவது. 3. இயற்கையைப் பயன்படுத்திக் குறிப்பாகக் கருத் தைத் தெரிவிப்பது. 4. இயற்கையை மனித வாழ்வுடன் இணைத்துக் காட்டுவது. 5. இயற்கையின் வாயிலாக அரிய நீதிகளையும் பெரிய உண்மைகளையும் தெரிவிப்பது. இவ்வைந்து வகைகளிலும் பாவேந்தர் கண்ட இயற்கை அடங்குகின்றது எனலாம். இயற்கையின் காட்சியழகில் ஈடுபட்டுச் சித்திரிப்பதற்கு, அழகின் சிரிப்பில் (அழகு-1) அழகினைப் பெண்ணாகக் கண்டின் புற்ற பாடலை, காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே தளிர்கள் தம்மில் தொட்டஇடம் எல்லாம் கண்ணில் தட்டுப்பட்டாள் - அழகின் சிரிப்பு, அழகு, ப. 1. போன்றவற்றைக் காட்டாகக் காட்டலாம். பா-6